அமிழ்ந்து போவதில்லை, கடந்து போவாய்

Sermon  •  Submitted
0 ratings
· 138 views
Notes
Transcript
Sermon Tone Analysis
A
D
F
J
S
Emotion
A
C
T
Language
O
C
E
A
E
Social
View more →

அமிழ்ந்து போவதில்லை, கடந்து போவாய்

கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்து போகும் வரைக்கும், நீர் மீட்ட ஜனங்களே கடந்து போகும் வரையும் .. (யாத் 15.16)
கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்து போகும் வரைக்கும், நீர் மீட்ட ஜனங்களே கடந்து போகும் வரையும் .. (யாத் 15.16)
கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப் பண்ணி .. (சங் 78.13)
ஏப்ரல் 14ம் தேதி, 1912-ம் வருடத்தில் செளத்தம்டனிலிருந்து நியுயார்க நகரத்தை நோக்கி டைட்டானிக் என்ற கப்பலில் 2220 பேர் தங்கள் பிரயாணத்தைத் தொடங்கினார்கள். தண்ணீர் புகாதபடி பதினாறு உட்பிரிவு அறைகளைக் கொண்டு செய்யப் பட்டிருந்த அந்த கப்பல் அமிழவே அமிழாது என்று விளம்பரப் படுத்தியிருந்தார்கள்.
அமெரிக்காவிலுள்ள கோடீஸ;வரரான ஜாண் ஜக்கப் அஸ;டர், பெஞ்சமின குகன்கெய்ன், இஸிடோர் உட்பட பலு பிரபலுமான மனிதர்கள் அந்த கப்பலில் பிரயாணம் செய்தனர். ஆனால் திடீரென எந்தவித முன்னெச்சரிக்கையும் இல்லாதபடி, 46000 டன் எடையுள்ள அந்த கப்பல் ஒரு மிதக்கும் பனிப் பாறையில் மோதி மூழ்கத் தொடங்கியது. ஒரு சிலு வினாடிகளுக்குள்ளாக உல்லாச உணர்விலிருந்த அனைவரும், பயத்துக்கும் திகிலுக்கும் ஆளாகி தங்கள் பிராணனுக்காகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.
1513 பிரயாணிகளும், கப்பலொட்டிகளும் சமுத்திரத்தின் நடுவிலெயே அமிழ்ந்து போனார்கள். விபத்துக்களும், அபத்துக்களும், அபாயங்களும் நமக்கு வராது என்று மெத்தனமாக இருந்து விட முடியாது. திடீரென சடுதியாக எதுவும் எவரையும் சந்திக்கலாம்.
அமிழவே அமிழாது என்று நம்பியிருந்த அத்தனைபேரும் அமிழ்ந்து போனார்கள். சமுத்திரம் அவர்களை விழுங்கிப் போட்டது. பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பெருமிதத்தோடு இருந்தவர்கள் இமைப் பொழுதிலெ அமிழ்ந்து போனார்கள். அவர்கள் நம்பியிருந்த நம்பிக்கை என்னவாயிற்று?
அமிழாது என்று நம்பியிருந்தவர்கள் அமிழ்ந்து போனார்கள். ஆனால் அமிழும் நிலையில் இருந்தவர்கள்-அமிழ்ந்து விடுவோம் என்று அஞ்சியவர்களை அமிழாமல் கடந்து போகச் செய்தது என்ன? அது தான் விசுவாசம்.
அநேக ஆண்பிள்ளைகளின் உயிரைக் குடித்த நைல் நதியில் மோசே 3 மாத சிறு குழந்தையாகப் போடப்பட்டான். ஆனாலும் அமிழ்ந்து போகவில்லை. பெற்றோரின் விசுவசத்தினால் இராஜ அரண்மனைக்குக் கடந்து போனான்.
எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் மோசேயைக் கொலை செய்ய எத்தனித்தான். ராஜாவின் கோபத்திற்கு யார் தப்ப முடியும்? அழிந்து விடவில்லை. விசுவாசத்தினால் எகிப்தைக் கடந்து போனான்.
விடுவிக்கப் படமுடியாத எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தேவ ஜனங்களையும் விடுவித்து, கடக்கமுடியத சிவந்த சமுத்திரத்தையும் உலுர்ந்த தரையைக் கடந்து போவதுபோலுக் கடக்கப் பண்ணி வழிநடத்திச் சென்றான் இந்த மோசே.
எனக்கன்பான சகோதரனே, சகோதரியே பலுவிதமான பிரச்சினைகளில் அலுசடிபட்டு இதை என்னால் கடக்கமுடியுமா? அமிழ்ந்து விடுவேனோ என்று கலுங்கிக் கொண்டிருக்கிறாயா?சூழ்நிலைகள், இயற்கை எல்லுவாவற்றின் மேலும் முழு அதிகாரமுள்ள தேவனை நீ விசுவாசிப்பாயானால், நீ அமிழ்ந்து போவதில்லை. கடந்து போவாய்.
நதியைக் கடந்தவன்:
அவள்; அவனை ஜலுத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்க மோசே என்று பெயரிட்டாள். (யாத் 2.10)
எகிப்தின் அடிமைத் தனத்திலெ, அடிபை;பட்டுத் தவித்த ஒரு அடிமைக் குடும்பத்திலெ, பிறக்கும்போதே ஓர் அடிமையாகப் பிறந்தவன்தான், இந்த மோசே. அவன் அடிமையாகப் பிறந்த படியினால், கொல்லுப்பட வேண்டும் என்ற ராஜக்கட்டளை இன்னும் கடுமையாக்கப் படுகிறது.
குழந்தை பிறந்தால் குடும்பத்திலெ என்ன மகிழ்ச்சி? ஆதுவும் ஆண் குழந்தை என்றால் கேட்கவா வேண்டும்.? ஆனால் மோசேயின் பிறப்பு குடும்பத்தையே துக்கத்தில் ஆழ்த்தியது. புpறந்தவீடு, சாவு வீடு போலு காட்சியளிக்கிறது.
ஆனால் அந்தக் குடும்பம், தேவனை விசுவாசிக்கிற குடும்பம். வுpசுவாசித்ததனால், மோசேயின் குடும்பத்தார் ராஜாவின் கட்டளைக்குப் பயப்படவில்லை. (எபி 11.23) என்று, அவர்களடைய விசுவாசத்தை தேவ வசனம் மெச்சிப் பேசுகிறது. அவர்கள் தேவ சமூகத்தில் முழங்காலில் நின்று, கண்ணீர் வடித்து, கதறியிருப்பார்கள்.
பிpள்ளையை மூன்று மாதம் வரை ஒளித்து வைத்தார்கள். ஒரே போராட்டம். இப்பொழுது அதுவும் முடியத நிலை. ஆனாலும் அவர்களுடைய விசுவாசம், தளர்ந்து போகவில்லை, சோர்ந்து போகவில்லை. முழு குடும்பமும் விசுவாசத்திலெ கிரியை செய்ய ஆரம்பிக்கிறது. ஓர் நாணல் பெட்டி உருவானது. அதற்கு கீல் பு+சப்பட்டது. பிள்ளையைக் கிடத்தினார்கள். அநேக பிள்ளைகளைக் விழுங்கிய, கொலைக் களமாகக் காட்சியளித்த அந்த நைல் நதியிலெ, அற்புதத்தை தேவனிடத்திலெ அவர்கள் எதிர்பார்த்தார்கள். எத்தனை துணிச்சலான விசுவாசம்!
அவர்களுடைய விசுவாசம் வீண்போகவில்லை. ஆந்தப் பிள்ளையின் அழுகுரல், பார்வோன் குமாரத்தியின் இருதயத்தை அசைத்தது. துண்ணீரோடு தண்ணீராக அடித்துக் கொண்டு அமிழ்ந்து போக வேண்டிய அந்த பிள்ளை, விசுவாசத்தினால் பார்வோனின் அரண்மனையில் வளர்ந்தது. வுpசுவாசத்தின் கிரியை எத்தனை மகத்துவமானது!
பார்வோனின் உபாயத்தை, அவனுடைய தந்திரமான திட்டத்தைத் தவிடுபொடியாக்கியது அவர்களுடைய விசுவாசம். எந்தப் பிள்ளையை கொல்லும்படியாக எத்தனித்தானோ, அதே பிள்ளையை பார்வோன் தன்னையுமரியாமல், தன்னுடைய அரண்மனையில் வளர்க்கும்படிச் செய்தது தேவ ஞானம்.
அன்பானவர்களே, நீங்கள் விசுவாசிக்கக் கூடுமானால் தேவன் உங்களுக்கும் இதைச் செய்வார். விசுவாசத்தில் தொய்ந்து போயிருக்கிறீர்களா? குடும்பத்தின் பிரச்சினைகளால் கலுங்கிப் போயிருக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையிலெ சீறி எழுகின்ற புயல்கள், மரணத்தை உங்கள் கண்முன் கொண்டு வந்து பயப்படுத்துகிறதா? இந்த சூழ்நிலையிலெ உங்களுக்கு வேண்டியது விசுவாசமே. உங்கள் விசுவாசத்தைப் பயன் படுத்த வேண்டிய அரிய சந்தர்ப்பங்கள் தான் இவை. விசுவாசம் மரணத்தை ஜெயமாக விழுங்குகிறது. உங்கள் துக்கத்தை சந்தோஷஷமாக மாற்றுகிறது.
எகிப்தைக் கடந்தவன்
எகிப்;தை விட்டுப் போனான் (எபி11.27)
இஸ;ரவேல் ஜனங்கள், எகிப்திலெ கொடுமைப் படுத்தப் பட்டார்கள். தேவனை நோக்கி முறையிட்டார்கள். இப்பொழுது அவர்களுக்கு வேண்டியது, எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை. ஆனால் ஒரு நிபந்தனை! அவர்கள் எகிப்தை வெறுக்க வேண்டும். எகிப்தை விட்டு வெளியேற வேண்டும். இங்கே தான் சிக்கல் ஏற்படுகிறது. எகிப்தும் வேண்டும்;. விடுதலையும் வேண்டும். இது சாத்தியமாகுமா? யாத் 16.3, எண் 11.5 இதை நன்கு சுட்டிக் காட்டுகிறது.
எகிப்தை விட்டு வெளியேறிய பின்னும், எகிப்திலுள்ள மச்சங்கள, வெள்ளரிக்காய்கள், கொம்மட்டிக்காய்கள், கீரைகள், வெண்காயங்கள், வெள்ளைப் பு+ண்டுகள் - இவைகளையே நினைத்து இஸ;ரவேல் ஜனங்கள் அழ ஆரம்பித்தார்கள். தேவன் அவர்களுக்கு து}தரின் அப்பத்தையும், காடைகளையும் கொடுத்த போதிலும் அவர்களுடைய இச்சைகளைத் திருப்திப் படுத்த முடியவில்லை.. து}தர்களின் அப்பம் எங்கே,? கொம்மட்டிக்காய்கள் எங்கே? ஆனால் இந்த அற்பமான கொம்மட்டிக் காய் கூட, அவர்களை எகிப்திநகு நேராக இழுத்தது.
இன்னும் எண் 14.3,4-ல், எகிப்துக்குத் திரும்பிப் போகிறதே எங்களுக்கு உத்தமம். நுhம் ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டு எகிப்துக்குத் திரும்பிப் போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள். இந்த அளவிற்கு பேச ஆரம்பித்தார்கள் என்றால், எகிப்து அவர்களுடைய இருதயத்தை எவ்வளவு மயக்கி வைத்திருந்தது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
தேவனும் இதை நன்கு அறிந்திருந்தார். எகிப்தை விட்டு வெளியேறியவுடனேயே, கர்த்தர் அவர்கள் உள்ளத்திலுள்ளதை அப்படியே சொல்லி விட்டார். யாத் 13.17-ல் ஒரு யுத்தம் வந்தால் போதும், அவர்கள் மனமடிந்து எகிப்துக்குத் திரும்புவார்கள் என்றுhர். அவர்கள் சரீரம் எகிப்தைவிட்டு வந்ததே தவிர, அவர்கள் இருதயம் எகிப்தில்தான் இருந்தது.
எகிப்தை விட்டு வெளியேறுவது ஒரு சாதாரணமான காரியம் அல்லு. கர்த்தர் அநேக அற்புத அடையாளங்களை நிகழ்த்தி, கடைசி வாதையாக தலைச்சண் பிள்ளைகளைத் தொட்டார். எகிப்தியர்கள் இஸ;ரவேல் ஜனங்களைத் துரத்திவிடும்படியான ஒரு சூழ்நிலை உருவாகியது. சாகிறோமே என்று சொல்லி, தீவிரமாய் ஜனங்களை தேசத்திலிருந்து அனுப்பி விட அவர்களை மிகவும் துரிதப் படுத்தினார்கள். அவர்கள் எகிப்தில் தரிக்கக் கூடாமல் துரத்தி விடப் பட்டார்கள் என்று யாத் 12.33,39 வசனங்கள் சொல்லுகின்றன. ஒரு மனிதரோ, மிருகமோ, பொருளோகூட விடப் படாமல், அணியணியாய் எகிப்தை விட்டு வெளியே வந்தார்கள்.
இஸ;ரவேல் ஜனங்களை ஒரு பக்கத்திலும், மோசேயை மறு பக்கத்திலும் நிறுத்திப் பார்த்தால், மோசே முற்றிலும் மாறுபட்ட மனிதர். எபி 11.24,26-ஐ வாசித்துப் பாருங்கள். மோசே, பார்வோன் குமாரத்தியின் மகன் எனப்பட்டார். எகிப்தின் பொக்கிஷஷமே, அவர் கையில்தான் இருந்தது. அநித்தியமான பாவசந்தோஷஷம் - ஒரு சாதாரண மனுஷஷன் இவைகளில் மயங்கிப் போயிருப்பான். எகிப்துதான் பரலொகம் என்று நம்பியிருப்பான். ராஜவாழ்க்கை, இது யாருக்கு கிடைக்கும் என்று அதிலெயே திருப்திப் பட்டிருப்பான்.
ஆனால் மோசே, இங்கேதான் தன்னை நிருபித்துக் காட்டுகிறார். மோசே இவைகளை வெறுத்தார் என்று வேத வசனம் ஆணித்தரமாக கூறுகிறது. எனவேதான், மோசே எகிப்தை விட்டுப் போனார். அதற்கு அடிப்படை காரணம், விசுவாசமே. ஆனால் அவருக்குக் கிடைத்த பலுன் என்ன தெரியுமா? 40 வருட வனாந்திர வாழ்க்கைதான்.
இராஜ அரண்மனையில் வாழ்ந்தவர். எகிப்தின் கலைகளைக் கற்றவர், இன்று ஆடகளை மேய்க்கின்றார். ஆனாலும் எகிப்தை திரும்பிப் பார்க்கவில்லை. எகிப்துக்காக ஏங்கவில்லை. இஸ;ரவேலுரைப் போலு முறுமுறுக்கவில்லை.
எகிப்தின் பொக்கிஷஷம், அநித்தியமான பாவசந்தோஷஷம் ஆகிய இவைகள் நம் இருதயத்தை வஞ்சிக்கின்றன. சந்தோஷஷம் என்ற போர்வையைக் காட்டி, கொஞ்ச நேர சந்தோஷஷத்தைக் கொடுத்துப் பின் பாவத்திற்குள் தள்ளுவதுதான், சாத்தானின் சூழ்ச்சி. சந்தோஷஷம் என்று ஆரம்பித்துப் பின் பாவம்-கவலை-வியாதி-வேதனை என்று, கடைசியாக பாதாளத்திற்கே இழுத்துக் கொண்டு போய்விடுகிறது. எச்சரிக்கை!
இந்த சந்தோஷஷம், அழுகையிலும் - பற்கடிப்பிலும்தான் போய் முடியும். பாவத்தைப் பிறப்பிக்கக் கூடியதும், இச்சைகளைக் கிளறி விடக் கூடியதுமான எந்த சந்தோஷஷமும் பாவசந்தோஷஷமே. அது வேண்டவே வேண்டாம்.
சகோதரனே, சகோதரியே பாவத்தோடே விளையாடாதே. உன் வாலிபத்தைக் களங்கப் படுத்தி விடாதே. அநித்தியமான பாவசந்தோஷஷம் சந்தோஷஷம் அல்லு.
சமுத்திரத்தைக் கடந்தார்கள்.
வுpசுவாசத்தினாலெ அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலுர்ந்த தரையைக் கடந்து போவதுபோலுக் கடந்து போனார்கள;. ஏகிப்தியர் அப்படிச் செய்யத் துணிந்து அமிழ்ந்து போனாக்கள். ஏபி 11.29
பின்னாலெ எகிப்தின் ராணுவம். இட வலு பக்கங்களில் மலைககள் சூழ்ந்திருக்கிறது. முன்னாலெ கடக்க முடியாத சிவந்த சமுத்திரம்.
கர்த்தர் காட்;டிய பாதைதானே. தேவனே வழிநடத்திக் கொண்டு வந்த வழிதானே. அப்படியானால் ஏன் இப்படியான ஒரு நெருக்கடி உருவாக வேண்டும்? தவறாக வழிநடத்தப் பட்டு விட்டார்களா? இல்லுவே இல்லை.
இது ஒரு புத்தியற்ற நடவடிக்கை. எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டார்கள் என்பதே எந்த ஒரு மனிதனுடைய கணிப்பாக இருக்கமுடியும். இஸ;ரவேல் ஜனங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியதும் பிரேதக்குழிகளும், மரணமே. அந்த நிர்ப்பந்தமான சூழ்நிலையிலெ மரணத்தைத் தவிர எதை அவர்களால் சிந்திக்க முடியும்?
எனக்கன்பான சகோதரனே, சகோதரியே உனக்கு முன்பா இருப்பது சிவந்த சமுத்திரம் அல்லு. ஆனால் அதைக்காட்டிலும் உண்மையான வாழ்க்கைப் பிரச்சினை உன்னைக் கலுங்கப் பண்ணிக் கொண்டிருக்கிறதா? குழம்பிப் போய் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருக்கிறாயா?
நம் எல்லாருடைய நினைவுகளுக்கும் அப்பால் கிரியை செய்கிற தேவன் ஒருவர் நமக்கு உண்டு. இஸ;ரவேல் ஜனங்கள் அழிந்து போகவில்லை. அமிழ்ந்து போகவில்லை. சமுத்திரத்தைக் கடந்தார்கள். அல்லெலு}யா!
கர்த்தர் சூழ்நிலையையே முற்றிலும் மாற்றிப் போட்டார். மாட்டிக்கொண்டது இஸ;ரவேலுர்கள் அல்லு. எகிப்தின் மாபெரும் சேனை. மாட்டிக் கொண்டது மாத்திரமல்லு அமிழ்ந்து போனார்கள்.
ஆனால் கர்த்தர் தாம் அவர்கள் பக்கத்திலிராவிட்டால் என்ன நடந்திருக்கும்? .. .. .. நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. பார்வோனின் முழு சேனைக்கு முன்பாக இஸ;ரவேல் ஜனங்கள் எம்மாத்திரம்?
சங்124.1-6 வசனங்களைப் பாருங்கள். மனுஷஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால், கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால், அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள்.
அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின் மேல் பெருகி, கொந்தளிக்கும் ஜலுங்கள் நமது ஆத்துமாவின் மேல் புரண்டு போயிருக்கும் என்று இஸ;ரவேல் இப்பொழுது சொல்வதாக.
சமுத்திரத்தின் நடுவில் ஒரு வழி உண்டாகுமென்று யாரால் எதிர்பார்க்கக் கூடும்? என்ன ஆச்சரியம்! சமுத்திரமும் அவர்களுக்கு முன்பாக விலுகி வழி விட்டது. சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையாக நடந்து போனார்கள்.
எகிப்தின் சேனை சமுத்திரத்தின் நடுவிலும் அவர்களைத் துரத்திக் கொண்டு வந்து நெருங்கினார்கள். இஸ;ரவேலின் முன்னாக றடந்த தேவது}தனானவர் விலுகினார். விலுகினவர் போய் விடவில்லை. அவர்களுக்குப் பின்னாக நடந்தார். நம்மைச் சத்துரு தாக்கும்போது, நமக்கும் சத்துருவுக்கும் நடுவாக கர்த்தர் நிற்கிறார். நமக்காக யுத்தம் பண்ணுகிறார். நம்மை நெருங்கினாலும் நம்மைத் தொடாதபடி காக்கிறார்.
எகிப்தியருடைய இரதங்களி லிருந்து உருளைகள் கழலும்படிச் செய்தார். இரதங்களை வருத்தத்தோடே நடத்தினார்கள். எகிப்து சேனை முழவதும் சமுத்திரத்தின் நடுவிலிருக்கும்போது, சமுத்திரம் பலுமாய் திரும்பி வந்தது. பார்வோனின் முழச் சேனையையும் சமுத்திரத்தில் கவிழ்த்துப் போட்டார்.
நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாகக் கொடாதிருக்கிற தேவனுக்கு ஸ;தோத்திரம். கடற்கரையிலெ எகிப்தியர் செத்துக் கிடக்கிறதை இஸ;ரவேலுர் கண்டார்கள்.
கடலின் நடுவில் கதறலின் சத்தம். மடிந்துபோகிறோம். ஏன்? என்ன காரணம். பெருங்காற்று, சுழந்றாற்று. படவு அலைகளினால் மூடப்பட்டது. படவு தண்ணீரினால் நிரம்பியது. மூழ்கத் தொங்கியது.
சாதாரண படகுதான். செம்படவர்கள் மாத்திரமே. ஆனால் இந்த படகு மூழ்கவில்லை. காரணம் அந்த படவில் இயேசு இருந்தார். காற்றையும் கடலையும் அதட்டினார். மிகுந்த அமைதல் உண்டாயிற்று.
உன் பிரச்சினைகள் எவ்வளவு பெரியதானாலும் பரவாயில்லை. நீ இயேசுவை நம்பினால் கலுங்கத் தேவையில்லை. உன் விசுவாசத்தை தளர விடாதே. நீ அமிழ்ந்து போவதில்லை. கடந்து போவாய்.
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன். நீ ஆறகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை. நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய். அக்கினி ஜுவாலை உன்மேல் பற்றாது. (ஏசா 43.2
Related Media
See more
Related Sermons
See more